நாடு முழுவதும்... சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைக்கும். முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதம் கட்டணம் மாற்றியமைக்கப்படும். 

அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் கட்டணம் உயர்ந்த வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1228 சுங்க சாவடிகள் உள்ள நிலையில் தமிழகத்தில் 339 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சுங்க சாவடி கட்டணம் மாற்றியமைக்கப்படும் என தகவல் வெளியானது. 

பின்னர் மக்களவைத் தேர்தலின் அறிவிப்பு வெளியானதால் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் நாடு முழுவதும் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி அதிகாலை 12 மணி முதல் சுங்க சாவடி கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி சுங்க சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கு கட்டணமும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ. 5 முதல் ரூ. 20 வரை உயர்த்தப்படுகிறது. 

மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ. 100 முதல் ரூ. 400 வரை உயர்த்தப்படுகிறது. தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 55 சுங்க சாவடிகளில் முதற்கட்டமாக அரியலூர் அரியலூர் மணகெதி, திருச்சி கல்லக்குடி, வேலூர் வல்லம், திருவண்ணாமலை இனம் கரியாந்தல், விழுப்புரம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Toll fees Increase 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->