தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை!
Tamilnadu south rain alert
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் செய்திக் குறிப்பில் கூறியதாவது: தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், நவம்பர் 8 முதல் 13 வரை தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இன்று சனிக்கிழமை இந்த நான்கு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மலைப்பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 92 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
English Summary
Tamilnadu south rain alert