தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும், ஜூன் 5-ம் தேதியில் இருந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 

தற்போது கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில், பள்ளிகள் திறப்பை ஜூன் மாதம் இரண்டாம் வாரத்திற்கு ஒத்திவைக்க கோரி, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்படுகிறது. வெயில் சுட்டெரிப்பதால் ஜூன் 5 அல்லது ஜூன் 7ம் திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் என்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

முதல்வருடன் ஆலோசித்த பின் தேதி அறிவிக்கப்படும் என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அதிகாரபூர்மாக தெரிவித்துள்ளார். 

மேலும், பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல் சைக்கிள், லேப்டாப் வழங்கவும், பள்ளி திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu school leave issue anbil magesh 2023


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal