ஃபெலிக்ஸ் வழக்கில் திடீர் திருப்பம்! காவல்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட, யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமின் கோரிய வழக்கில், தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்த நிலையில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு விவரம் :

தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், சர்ச்சைக்குள்ளான அந்த பேட்டி கண்டு, அதனை ஒளிப்பரப்பிய ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்டை டெல்லியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu Savukku Sankar Red fix Bail Police MadrasHC 


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->