இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்ட நால்வர் குறித்து உருக்கமான தகவல்..! கண்ணீரை வரவழைக்கும் சோகம்.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடம் பகுதியை சார்ந்த மௌஸியா (வயது 30), வட்டான் வலசை நாகராஜ் (வயது 45), செந்தில்குமார் (வயது 28), இலங்கை அகதிகள் முகாமை சார்ந்த சாம்சன் (வயது 27) ஆகிய நான்கு மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீமிசல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். 

கடந்த 18 ஆம் தேதி கடலுக்குள் சென்ற இவர்கள், நள்ளிரவு நேரத்தில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துள்ளனர். இதன்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை அடித்து விரட்டியுள்ளனர். மேலும், விசைப்படகு மீது ரோந்து கப்பலை மோதவிட்டு கொடுமை செய்துள்ளனர். 

படகு சேதமடைந்து கடலில் தத்தளித்த நால்வரும் உதவிக்காக கோரிக்கை வைக்கவே, கொடூர சிங்கள கடற்படை அதிகாரிகள் கட்னுகொள்ளாமல் சென்றுள்ளனர். மீன்பிடிக்க சென்றவர்கள் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் தமிழக கடலோர காவல்படை விசாரணையில் ஈடுபட்டு வந்தது.  

இதன்பின்னர், இருவரின் உடல் யாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. மேலும், இலங்கை கடற்படை இரும்பு தடியால் மீனவர்களை தாக்கி கொலை செய்ததாகவும் கூறப்படும் நிலையில், உயிரிழந்தவர்கள் குறித்த உருக்கமான தகவல் தெரியவந்துள்ளது.

தங்கச்சிமடம் பகுதியை சார்ந்த மோசியாவின் பெற்றோர் அந்தோணிராஜ் - ஸ்டெல்லா மேரி. மோசியானுக்கு சைமன் என்ற சகோதரர் மற்றும் சந்தியா, கான்சிலான் என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். சந்தியாவிற்கு திருமணம் முடிந்துள்ள நிலையில், சைமன் மற்றும் கான்சிலா படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். 

மோசியானுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள் கவனித்து வந்த நிலையில் இந்த துயரம் நடந்துள்ளது. மற்றொரு மீனவரான சாம்சன், இலங்கை அகதிகள் முகாமை சார்ந்தவர். யாழ்ப்பாணத்தை சார்ந்த சாம்சன், அகதியாக தமிழகத்திற்கு வருகை தந்தவர். 

மண்டபம் முகாமில் தங்கியிருந்த சாம்சன், கடந்த சில வருடத்திற்கு முன்னதாக அகதிகள் முகாமை சார்ந்த விஜயலட்சுமி என்பவரை திருமணம் செய்த நிலையில், இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் வருமானத்திற்காக மீன்பிடிக்க சென்ற சாம்சன், சிங்களனால் வேட்டையாடப்பட்டு உள்ளார். 

வட்டான் வலசை பகுதியை சார்ந்த நாகராஜுக்கு மரகதம் என்ற 40 வயது மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். நாகராஜின் இழப்பு அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. திருப்புல்லாணி தாவனேந்தல் கிராமத்தை சார்ந்த மீனவர் செந்தில் குமாருக்கு ராஜி என்ற 26 வயது மனைவி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் உதயா என்ற மகன் இருக்கிறான். 

செந்தில்குமாரை நம்பி இருந்த அவரது குடும்பத்தின் அஸ்திவாரமே பலியாகியுள்ளதால், அவரது குடும்பம் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் நால்வரின் உடலும் இன்று ராமேஸ்வரம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Rameswaram Fisherman Killed by SriLankan Navy Issue Sad Family Details Exploded


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->