#Breaking: தமிழக ஆளுநருக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!
tamilnadu governor test positive corona virus
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், களப்பணியாற்றும் பலருக்கும் கொரோனா உறுதியாகி சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் உடல்நல பரிசோதனைக்கு அனுமதி செய்யப்பட்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வயது காரணமாக இயல்பான பரிசோதனைக்கு வந்துள்ளாரா? அல்லது கொரோனா தொடர்பான சிகிச்சை அல்லது பரிசோதனைக்கு வந்துள்ளாரா? என்பது குறித்த விபரங்கள் வெளியாகாமல் இருந்தது.

மேலும், ஆளுநர் மாளிகையில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனியார் மருத்துவமனைக்கு விரைந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆளுநரின் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், ஆளுநருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆளுநருக்கு அறிகுறியற்ற குறைந்தபட்ச கொரோனா உறுதியாகிருப்பதாகவும், இவர் வீட்டு கண்காணிப்பில் இருக்கும் அளவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், தற்போது ஆளுநர் மாளிகையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார் என்றும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
tamilnadu governor test positive corona virus