அங்கன்வாடி செயல்படும் நேரம் மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு.!
tamilnadu government info anganwadi working hours change
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் LKG & UKG தற்காலிக தொகுப்பு ஊதிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"கடந்த 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதையடுத்து LKG மற்றும் UKG வகுப்புகளில் தற்காலிகமாக பணிபுரியும் மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான கீழ்க்கண்ட கோரிக்கைகள் விதிகளுக்குட்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அங்கன்வாடி மையத்தின் பணி நேரம் காலை 9 முதல் மதியம் 12.30 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் சார்ந்த ஆசிரியர்களுக்கு மின்னணு நிதி பரிமாற்ற முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்தத் தற்காலிக ஆசிரியர்களுக்கு பிரதி மாதம் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் இருக்கக் கூடாது. மேற்குறிப்பிட்டவாறு மழலையர் வகுப்புகளை கையாளும் தற்காலிக சிறப்பாசிரியர்கள் மாதம் முழுவதும் பணிபுரிந்த காலத்தைக் கணக்கிட்டு ஒரு நாள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.
அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக சிறப்பாசிரியர்கள் பணிபுரியும் பள்ளியின் மூலம் கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை தளத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சார்ந்த ஆசிரியர்களுக்கு பதிவெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை EMIS எண் பெறாதவர்கள் உடனடியாக பணிபுரியும் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் பள்ளி பயன்பாட்டிலுள்ள Login-ல் ஆசிரியரின் விவரத்தினை பதிவேற்றம் செய்து EMIS எண் பெற சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கண்ட மையங்களில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரும் EMIS எண் பெற்ற விவரத்தினை மாவட்டக் கல்வி அலுவலரால் உறுதி செய்யப்பட வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu government info anganwadi working hours change