பட்ஜெட் தாக்கல், தமிழக அரசு ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பணிகளை தமிழக நிதித் துறை மேற்கொண்டுள்ளது. பட்ஜெட் தயார் செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. 

தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் மற்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், பிற அமைச்சர்கள் மற்றும் தொழில், வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் நிதித் துறை செயலர் முருகானந்தம் மற்றும் பல்வேறு தொழில் கூட்டமைப்புகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் தாக்கல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu Government budget


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->