#BREAKING : உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்ப மாணவர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு அவர்களை அழைத்துச் செல்ல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வாழ் தமிழர் நிதியை பயன்படுத்தி மாணவர்களை மீட்கும் பணியை உடனடியாக மேற்கொள்ளபடுகிறது. மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் மற்றும் சிறப்பு குழுக்களுக்கான செலவு என ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்தும், டெல்லி வந்தடையும் மாணவர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வருவதற்காக ரூ.2 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

போர் முனை பகுதியில் இருந்து அண்டை நாட்டின் எல்லைப் பகுதிக்கு 35 மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான பேருந்து கட்டணமாக ரூ.14 லட்சத்தை அரசு செலுத்தியுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்தின் நிதியை பயன்படுத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Government allocated rescue students fund


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->