தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரன் ரூ.91,000-ஐ தாண்டியது!
tamilnadu gold rate today
கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை, அதன் பிறகு கணிசமாகக் குறைந்து வாடிக்கையாளர்களுக்குச் சற்று ஆறுதலை அளித்தது. அக்டோபர் 22-ஆம் தேதி சவரனுக்கு ரூ.3,680-ம், 28-ஆம் தேதி ரூ.2,200-ம் குறைந்ததால், ஒரு சவரன் விலை ரூ.89 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
சமீப நாட்களாகத் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நவம்பர் 6-ஆம் தேதி ஒரே நாளில் இருமுறை விலை உயர்ந்தது. காலை மற்றும் பிற்பகலில் தலா சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.90,560-க்கு விற்பனையானது.
அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 7-ஆம் தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்கப்பட்டது. நவம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, விலை ரூ.90,400 என நீடித்தது.
வாரத் தொடக்கத்தில் புதிய ஏற்றம்
இந்நிலையில், வாரத் தொடக்கமான இன்று (நவம்பர் 10) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
கிராம்: ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,410-க்கு விற்பனையாகிறது.
சவரன்: ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,280-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.167 ஆகவும், பார் வெள்ளி ரூ.1,67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
tamilnadu gold rate today