தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை- அமைச்சர் அன்பில் மகேஷ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. அந்த வகையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சில  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

அதன் காரணமாக, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வரும் ஜனவரி 31ம் தேதியுடன் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை முடிவுக்கு வர உள்ளதால் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதலமைச்சரிடம் பரிந்துரை வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பு முறையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu discuss the school open


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->