மத்திய அரசுக்கு கமலை போல வக்காலத்து வாங்கும் சீமான்? - கே. பாலகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஊரக வேலைவாய்ப்புகளை முடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் சீமான் வக்காலத்து வாங்கி வருகிறார் என சி.பி.ஐ.எம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். 

புதுக்கோட்டை நகரில் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (எம்) பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " குடிமை பணிகள் தேர்வு அரசு பயிற்சி மையங்கள் அதிகளவு ஏற்படுத்த வேண்டும். 

அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், இணையவழி பதிவு முறைகள் தேவையில்லாதது. சாதாரண விவசாயிக்கு இது மிகவும் சாத்தியம் இல்லாததது. அரசு இதனை மறுபரிசீலனை செய்தது வரவேற்கத்தக்கது. மக்களவை, சட்டமன்ற தேர்தலை போன்று, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், கட்டுக்கோப்போடு உள்ளது. 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். அதிமுக அரசு கொண்டு வந்த மாநில அளவு ஒப்பந்த முறைகள் இரத்து செய்யப்படவேண்டும். 2024 ஆவது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும். 

தேசிய ஊரக வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீமான் அவதூறாக பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. அவரின் பேச்சு இந்த திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவது போல உள்ளது. 

கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.10 இலட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்கையில் சீமான் என்ன செய்தார்?. இந்தியாவில் 14 கோடி கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் திட்டத்தை குறை கூறுகிறார். கடந்த தேர்தலில் நடிகர் கமல் பேசியதை சீமான் பேசுகிறார் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu CPIM K Balakrishnan Condemn to NTK Seeman 3 Oct 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->