ஆர்.எஸ்.பாரதி விஞ்ஞானியா?.. அறிக்கைவிட்ட ஸ்டாலினுக்கு இடியாக பதில் கூறிய முதல்வர்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் செய்தியாளர்களை சந்திக்கையில், இன்று சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம், சேலம் மாநகரத்தில் நிலவி வரும் பிரச்சனை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்பட்டுள்ளது. கோடைகாலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அனைத்து நடவடிக்கையும் பின்பற்றியுள்ளதால், கொரோனா இல்லாத மாநிலமாக சேலம் மாறியுள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 30 க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனைப்போன்று வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இப்போதைய சூழலில் வெளிநாடு மற்றும் வெளிமாநில நபர்களுக்கு கொரோனா உறுதியாகிறது. உள்ளூர் மக்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. தமிழகத்தில் மொத்தமாக 41 அரசு கொரோனா பரிசோதனை மையம் மற்றும் 26 தனியார் கொரோனா பரிசோதனை மையம் இருக்கிறது. நாளொன்றுக்கு 13 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்த வரையில் நோய்பரவளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர் என பல்வேறு அரசு துறையின் நடவடிக்கையால் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மக்களுக்கு கோடைகாலத்தில் நீர் சரிவர வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் பாசன பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கடைமடை பகுதியிலும் நீர் கிடைக்க வழிவகை செய்யும் முறைகளில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு உள்ள குடும்பத்திற்கும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் என பல்வேறு நிதிஉதவி மற்றும் அத்தியாவசிய உதவிகள் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறுகுறு தொழில்கள் புறநகர் பகுதிகளில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பணிகளுக்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோ இயங்கவும், சலூன் கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் வழிகாட்டல் படி முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, வெளியில் சென்று வந்ததும் கை, கால்களை கழுவுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். 

திமுக ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் எனது மீதும், அரசு மீதும் குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது வேடிக்கையாக இருக்கிறது. சட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வன்மையான கண்டனம் தெரிவிக்கிறேன். காவல்துறை சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்ததற்கு, பழனிச்சாமி ஆகிய நான் என்ன செய்வேன். அரசியல் செய்து, குற்றம் சுமத்தி கேவலமான அரசியல் ஸ்டாலின் செய்து வருகிறார்.

ஆர்.எஸ்.பாரதி மிகப்பெரிய விஞ்ஞானி போலவும், என் மீது புகார் கொடுத்ததற்காக நான் கைது நடவடிக்கை எடுத்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஊடக நண்பர்கள் உண்மையை அறிந்து செயல்படவேண்டும்.. அனைத்தையும் செய்தியாக பதிவு செய்து, பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம். உயர் பொறுப்புகளில் இருக்கும் நபர்களை பழிசுமத்தி முகஸ்டாலின் மக்களை ஏமாற்ற நினைக்கிறார். ஊழல் நடக்க அங்கு பணிகளே துவங்கவில்லை. பொய்யான செய்தியை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். 

இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக விளங்கும் தமிழக அரசு, பாதிக்கப்பட்ட நபர்களில் இருந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நபர்கள் என அனைவருக்கும் சிறப்பான வசதிகள் மற்றும் சிகிச்சைகள் அரசு மேற்கொண்டு வருகிறது. பத்திரிகையாளர்களுக்கும் பல வசதி ஏற்படுத்தப்பட்டது. பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு மேலாக அரசு என்ன செய்ய வேண்டும். 

இரவு பகல் பாராது செவிலியர் மற்றும் மருத்துவர், அரசு பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர். ஸ்டாலினிற்கு பலரின் அர்ப்பணிப்பு தெரியாது. மத்திய அரசின் வழிகாட்டல் படி அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் அரசு சார்பாக பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் சிறிய அளவிலான அறைகளில் அதிக மக்கள் வசித்து வருகின்றனர். 

நோய்த்தடுப்பு பகுதிகளில் உள்ள இல்லங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் சிறிய அளவிலான அறைக்குள் இருப்பதால், பாதிப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து வருகிறது. மருத்துவ குழு மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல் படி மேற்படி தளர்வு வழங்கப்படலாம் என்று கூறினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Latest Press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->