தமிழகம் முழுவதும் பள்ளியை விட்டு இடை நின்ற மாணவர்களை கண்கெடுக்கும் பணி தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


பள்ளியை விட்டு இடை நின்ற மாணவர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கவுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கினால் பல பெற்றோர்கள் தங்கள் வருவாயை இழந்தனர். இதனால் குழந்தைகளை பள்ளியிலிருந்து இடையில் நிறுத்தி வேறு வேலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

தமிழகமெங்கும் பள்ளியை விட்டு இடை நின்ற மாணவர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி வருகின்ற 10 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இந்த கணக்கெடுப்பில் ஈடுபடுகிறது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்: பள்ளிகள் திறக்காத இந்த காலத்தில் மாணவர்கள் பல்வேறு வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறி வருகின்றனர். இவர்களை மீண்டும் பள்ளிகளில் கொண்டு வந்து சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.

1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பாட புத்தகங்கள் வாங்காத மாணவர்களின் பட்டியலை கொண்டு இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த கணக்கெடுப்பில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பு சர்வே ஆப் மூலம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilandu Govt Take Senses about School Drop Students List due to Economical Issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->