தமிழுக்கு மாறுங்க - தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! விரைவில் மாற்றம் காணும் தமிழகம்!
Tamil Name Board in Shops And Govt Buldings
கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை சாலை, இர.ச.புரம் பகுதியில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் இன்று (29.05.2024) தமிழ் வளர்ச்சித் துறையினர் களஆய்வு மேற்கொண்டபோது ஆவின் பாலகத்தின் இரண்டு புறங்களிலும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகை வைத்து தமிழில் பெயர்ப்பலகை இல்லாதது கண்டறியப்பெற்றது.
களஆய்வின்போது அரசாணையின் பலகையினைத் தமிழில் விரைந்து பெயர்ப் விதிகளுக்குட்பெற்று மாற்றிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்றும் ஆவின் "ஹை-டெக் பார்லர் என்பதனைத் தமிழில் "ஆவின் உயர்நுட்பப் பாலகம் " என்று உடன் மாற்றி அமைக்கும்படியும் ஆவின் பொது மேலாளர், உதவி உ பொது மேலாளர் ஆகியோர்களிடம் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்களால் வலியுறுத்தப்பெற்றது. மேலும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆவின் மேலாண்மை இயக்குநருடன் அலைபேசி வழியே தொடர்புகொண்டு இத்தகவலைப் பகிர்ந்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக "ஆவின் உயர்நுட்பப் பாலகம் " என்று தமிழில் பெரிய எழுத்துருவில் பெயர்ப்பலகை மாற்றப்பெற்றது. கோயம்புத்தூர் மாவட்டம் மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் இதேபோல் துரித நடவடிக்கை மேற்கொள்வதாக ஆவின் மேலாண்மை இயக்குநர் உறுதியளித்தார்.
அரசு நிறுவனங்கள் விரைந்து பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்றுவதைப் போல வணிக நிறுவனங்களும் தங்களின் பெயர்ப்பலகைகளைத் தமிழில் உடன் மாற்றி தமிழ்மொழியின் அமைத்திடுவதற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கவேண்டுமெனத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். கோயம்புத்தூரில் ஆவின் பாலகத்தின் பெயர்ப்பலகைத் தமிழில் மாற்றப்பெற்றமைக்கு தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் தமிழ் வளர்ச்சித்துறைக்கு மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Tamil Name Board in Shops And Govt Buldings