டெல்லிக்கு நோ சொன்ன தமிழ்நாடு...! புதிய வக்பு சட்டம் இங்கு அமல்படுத்தப்படாது...! - அமைச்சர் ஷாஜகான் அதிரடி பிரகடனம்...!
Tamil Nadu which said no to Delhi new Waqf Act not be implemented here Minister Shahjahan dramatic declaration
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், வக்பு சட்டத் திருத்தம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கினார்.அப்போது அவர் பேசியதாவது,"புதிய வக்பு சட்டம் தற்போது இந்தியாவின் எந்த மாநிலத்திலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழ்நாட்டிலும் அந்த சட்டம் அமலுக்கு வரவில்லை. எதிர்காலத்திலும் அதை அமல்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை.இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் மற்றும் அரசியல் ஆலோசகர்களுடன் விரிவான கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாநில மக்களின் நலன் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
புதிய வக்பு சட்டத்திற்கு எதிராக முந்தைய ஆட்சியில் திமுக அரசு கடைப்பிடித்த நிலைப்பாட்டையே தற்போதைய தமிழக வெற்றிக்கழக அரசும் தொடர்ந்து முன்னெடுக்கும். வக்பு சொத்துக்களின் உரிமைகள் மற்றும் நிர்வாக சுதந்திரம் பாதிக்கப்படும் எந்த முயற்சியையும் அரசு ஏற்காது.
உமித் இணையத் தளத்தில் வக்பு சொத்துகளை பதிவேற்றம் செய்வதில் பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சவால்கள் எதிர்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும், அதிகாரிகள் இயன்ற அளவில் பெரும்பாலான விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இன்னும் பதிவேற்றம் செய்யப்படாத சொத்துகளின் விவரங்களையும் விரைவாக இணைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வக்பு சட்டத் திருத்தத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்யும். இதுதொடர்பாக சட்டப்பேரவையிலும் உரிய தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.
English Summary
Tamil Nadu which said no to Delhi new Waqf Act not be implemented here Minister Shahjahan dramatic declaration