தமிழகமே தியேட்டரானது...! - எல்.இ.டி திரைகளில் 'முதல்வர்' விஜய்யைக் கண்டு மெய்சிலிர்த்த தொண்டர்கள்...! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் புதிய மாற்றத்தின் அடையாளமாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக்கழகம், சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்து அரசியல் அதிர்வலை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவுடன் 120 உறுப்பினர்களின் பலத்தை எட்டி ஆட்சியமைத்துள்ளது.

இந்த அரசியல் எழுச்சியின் உச்சமாக, த.வெ.க. தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட பதவியேற்பு விழாவில், மக்களின் கரகோஷத்துக்கு மத்தியில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.பொறுப்பேற்ற உடனேயே, மக்கள் நலனை மையமாகக் கொண்ட மூன்று முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார்.

அதில், குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டம் முக்கிய கவனத்தை ஈர்த்தது. இந்த அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து மக்களிடம் உரையாற்றிய விஜய், வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியை வழங்குவேன் என்று உறுதியளித்தார். மக்கள் வரிப்பணம் பாதுகாக்கப்படும் என்றும், அதிகார துஷ்பிரயோகத்திற்கு இடமளிக்கப்படாது என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.

நேரு உள் விளையாட்டு அரங்கில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விழாவைக் காண முடியாத பொதுமக்கள் மற்றும் த.வெ.க. தொண்டர்களுக்காக சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் மாபெரும் ஒளித்திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அவற்றின் முன் திரண்ட மக்கள், விஜய் முதலமைச்சராக பதவியேற்ற தருணத்தை கைதட்டல்களுடனும் உற்சாக முழக்கங்களுடனும் கொண்டாடினர் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu itself theater Volunteers mesmerized by seeing Chief Minister Vijay LED screens


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->