வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு...முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்! - Seithipunal
Seithipunal


சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதுவே கம்பர் கண்ட கனவு” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழாவில் உரையாற்றினார்.அப்போது அவர், கம்பன் விழாவுடனான தனது தொடர்பையும், முன்னாள் தலைவர்கள் கலைஞர் கருணாநிதி, அண்ணா ஆகியோர் கம்பன் விழாக்களில் பங்கேற்ற நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்தார். விழாவில் விருதுகள் பெற்ற வைரமுத்து, பேராசிரியர் ஞானசுந்தரம், பழ. பழநியப்பன், சாரதா நம்பி ஆரூரன், சுகி சிவம், இலங்கை ஜெயராஜ் உள்ளிட்டவர்களை வாழ்த்தினார்.

இளைய தலைமுறைக்கு இலக்கியச் சுவையை ஊட்டும் வகையில் இப்படிப்பட்ட விழாக்கள் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திராவிட இயக்கம், கம்ப இராமாயணத்தை விமர்சன ரீதியாகக் கண்டாலும், அதன் தமிழும் கவிதையும் பாராட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

வால்மீகி இராமாயணத்தை தமிழ் மணத்துடன் கம்பர் எழுதியதைப் பாராட்டிய அவர், கம்பர் சமூக ஒற்றுமையும் சமரசப் பார்வையும் கொண்டவர் எனச் சுட்டிக்காட்டினார்.“வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது; சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக உள்ளது. இதுவே கம்பர் கண்ட கனவு” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

விழாவை சிறப்பாக நடத்திய ஜெகத்ரட்சகனையும் பாராட்டி, “நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள்; நான் என் மக்கள் பணியைத் தொடர்கிறேன்” என்று உரையை முடித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu is a leading state in development Chief Minister Stalin is proud


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->