7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு.,.!
Tamil Nadu government orders transfer of 7 IPS officers
ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் விபரம் பின்வருமாறு:
ஐபிஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ ஊர்க்காவல் படை ஐஜி (சென்னை) பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி அவினாஷ் குமாருக்கு மாநில குற்ற ஆவணப் பிரிவு ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி சங்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக (செங்குன்றம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்வரி காவலர் பயிற்சி கல்லூரியின் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி முத்தரசி காவல்துறையின் ஊடக செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையில் ஊடகங்களை சந்திக்க புதிய பொறுப்பை உருவாக்கி எஸ்.பி. அந்தஸ்தில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி முத்தரசிக்கு சட்டம் ஒழுங்கு (சென்னை) உதவி ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu government orders transfer of 7 IPS officers