அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...! ரூ. 97.77 கோடி நிலுவை தொகை நிதி ஒதுக்கீடு...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு, கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.99 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

ஆர்.ராஜேந்திரன்:

அதில் அவர் குறிப்பிட்டதாவது,"கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இத்தொகை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu government issues order Rs 97POINT77 crores of pending funds allocated


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->