அடுத்த அதிர்ச்சி! அதிவேகமாக பரவிவரும் தட்டம்மை நோய்!
mongolia measles spreads
மீண்டும் கொரானா தலைதூக்கியுள்ள நிலையில், மங்கோலியாவில் தட்டம்மை நோய் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நாடுமுழுவதும் 3,042 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 114 புதிய பேரில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை தகவலின்படி, இதுவரை 1,904 பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர். புதிய தொற்றாளர்களில் பாதி பேர் வெறும் ஒரு தடுப்பூசி மட்டுமே பெற்ற பள்ளிக்குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி முற்றிலும் செலுத்த வேண்டிய அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தட்டம்மை தொற்றானது சளி, இருமல், காய்ச்சல், கண்வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி, சுவாச துளிகள் மற்றும் நேரடி தொடர்பு வழியாக எளிதில் பரவும் தன்மை கொண்டது.
இந்த நோய் குழந்தைகளை பெரிதும் பாதிப்பது ஆபத்தான நிலையாக பார்க்கப்படுகிறது. உலகளவில் கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் இந்த நோயால் 1,07,500 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகளாக இருப்பது, நோயின் மோசமான தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.