பிரதமர் மோடி-முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: முன்வைத்த கோரிக்கைகள் என்ன..? நிருபர்களிடம் பேட்டி..! - Seithipunal
Seithipunal


டில்லியில் பாரத மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிடி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிடி ஆயோக் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியே சந்தித்து பேசியுள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது:- 

பள்ளி கல்வித்துறைக்கான எஸ்எஸ்ஏ நிதியை பெறுவது, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம், அந்த நகரங்களில் உள்ள விமான நிலையம் விரிவாக்கம், சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைப்பது, செங்கல்பட்டு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்றுவது, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை, கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிட மக்களை ஆதி திராவிடர் பட்டியலில் சேர்ப்பது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவித்தல் ஆகிய கோரிக்கைகளை நிடி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தி பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிடி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடியை சந்திக்க 02 நிமிடங்கள் வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் இந்த கோரிக்கையை முன் வைத்தேன் என்று தெரிவித்துள்ளார். மோடி இதனை செய்வேன் என்று கூறியுள்ளார்.ஆனால், செய்வாரா மாட்டாரா என்பது போகப்போக தெரியும் என்றும், தமிழகத்திற்கான கல்வி நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் நிருபர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தனர். அதனை , பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்திய பிறகு அவர் நிதியை விடுவித்தார். இதனை நினைவுபடுத்தி நன்றி தெரிவித்தேன். அப்போது, மோடி,  நீங்கள் சொன்னீர்கள். அதை நான் செய்தேன் எனக்கூறினார். அதை போன்று இதையும் கூறியுள்ளேன். அஅத்தனையும் செய்யுமாறு கூறியுள்ளேன் என்று கூறியுள்ளார். 

மேலும், சோனியா, ராகுலை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், அதேநேரத்தில் அவர்களிடம் அரசியல் பேசவில்லை எனக்கூற மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், அமலாக்கத்துறை தொடர்பான உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியின் கருத்து நியாயமானது என்றும், அவர் நியாயமான தீர்ப்பை கூறியுள்ள்ளதாகவும், அமலாக்கத்துறை சோதனை அரசியல் ரீதியானது அதனை முறைப்படி சந்திப்போம் வேண்டும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் நிருபர்களிடம் மேலும் பேசுகையில், 'நான் வெள்ளைக்கொடி காட்டுவதாக அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறுகிறார். அவர் போன்று என்னிடம் வெள்ளைக்கொடியும் இல்லை. அவரிடம் இருப்பது போன்று காவிக் கொடியும் இல்லை.' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், டாஸ்மாக் மற்றும் குவாரி ஊழல் நடந்ததாக ED  கூறுவது பொய், பித்தலாட்டம் என்றும் தேவையில்லாமல்  பிரசாரம் செய்கின்றனர் என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மறுத்து உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் நெருங்க நெருங்க இதனை செய்கின்றனர். அதனை சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நிருபர்களிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What were the demands made in the meeting between Prime Minister Modi and Chief Minister Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->