கொச்சியில் எண்ணெய் கண்டெய்னர் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது: மாலுமிகளை மீட்கும் பணி தீவிரம்..!
Oil container ship sinks in Kochi rescue efforts underway
கேரளாவில் கொச்சி துறைமுகத்திற்கு கண்டெய்னர் கப்பல் திடீரென கடலில் மூழ்கியுள்ளது. கப்பலில் சிக்கிய மாலுமிகளை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
184 மீட்டம் நீளம் கொண்ட லைபீரியா கொடி கட்டிய கண்டெய்னர் கப்பல் ஒன்று, நேற்று விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கொச்சி துறைமுகம் வந்தடைய வேண்டிய நிலையில், கொச்சியின் தென்மேற்கு பகுதியில் 38 நாட்டிங்கல் மைல் தொலைவில் கடலில் மூழ்க தொடங்கியுள்ளது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட கப்பல் மாலுமிகள், கடலோர காவல் படையினரிடம் உதவி கோரியுள்ளனர். உடனடியாக கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்ட்டுள்ளனர். 24 மாலுமிகளுடன் பயணித்த கப்பலில் 09 பேர் லைப் ஜாக்கெட் அணிந்து கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளனர். எஞ்சிய 15 பேரில் 12 பேர் மீட்கப்பட்ட நிலையில், 03 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கண்டெய்னர் கப்பலில் 367.1 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84.4 மெட்ரிக் டன் கேஸ் எண்ணெயும் ஏற்றி வரப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் கடலில் கலந்தால், மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என எண்ணெய் கடலில் கலக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை கடலோர காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், கடலிலோ அல்லது கடற்ரையிலோ எண்ணெய் அல்லது கண்டெய்னர்களை கண்டால், பொதுமக்கள் அதனை தொடாமல் இருக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும்,கடலோர காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் கொடுக்க வேண்டும் எனவும், அல்லது 112 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Oil container ship sinks in Kochi rescue efforts underway