பாகிஸ்தான் ஆதரவாளர்கள் 76 பேர் கைது!
Assam Pakistan supporters arrested
வடகிழக்கு மாநிலமான அசாமில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 76 ஆக உயர்ந்துள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், மாநிலத்தில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை மையமாகக் கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நல்பாரி, சௌத் சல்மரா மற்றும் கம்ரூப் மாவட்டங்களில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாமின் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா, “பாகிஸ்தானுக்கு ஆதரவாக அல்லது இந்தியாவுக்கு எதிராக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும்” எனக் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ஆதரவான கருத்துக்களை பதிவிட்டதோடு, இந்தியா தொடர்பாகத் தீவிர எதிர்ப்பு கருத்துகள் பரப்பியவர்களும் இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இதில், ஏ.ஐ.டி.யூ.எஃப். கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டு, அவரது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Assam Pakistan supporters arrested