தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாதாம்..சொல்கிறார்  இலங்கை மந்திரி! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாது என்று இலங்கை மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டும் மற்றும் நீதி மன்ற காவலிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதேபோல் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளும் இலங்கை வசம் உள்ளது.

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.இந்தநிலையில்  மீண்டும் , எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 14 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது எனவும், அவர்கள் தங்கள் எல்லைக்குள் நுழையாமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை துறைமுகம், போக்குவரத்துத்துறை மந்திரி பிமல் ரத்னநாயகா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருவதை நாங்கள் அறிவோம். ஆனால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இந்தியா தடுத்தால் அது யாழ்ப்பாண மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் வட இலங்கை மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர் என்றும்  மன்னார், தலைமன்னாரில் வேறு எந்த தொழிற்சாலையும் இல்லை என்றும் மீனவர்கள் எல்லை தாண்டாமல் தடுத்தால் அதற்காக இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்' என அவர் தெரிவித்தார்.https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fseithipunal%2Fvideos%2F1406588954047975%2F&show_text=true&width=476&t=0


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu fishermen should not cross the border. Sri Lankan Minister says!


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->