கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு  அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்.! - Seithipunal
Seithipunal


கிண்டியில் உயர்தர பன்னோக்கு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார்.

இந்திய அளவில் சுகாதாரத் துறையிலும், மருத்துவர் கட்டமைப்பிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது. தற்போது அடுத்த கட்டத்திற்கு செல்லும் வகையில் உயர்தர பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படுவது இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஏற்கனவே 8 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவமனை உள்ள நிலையில், தற்போது மேலும், 4 ஏக்கர் பரப்பில் 6 தளங்களுடன் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இறுதியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Chief Minister lays foundation stone for Kindi Multipurpose Hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->