அதிகாலை 5 மணி முதல்... சென்னை உள்பட 12 இடங்களில் NIA சோதனை! பரபரப்பில் தமிழகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனமைப்பு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தஞ்சாவூரில் அருளானந்தம் நகர், சாலியமங்கலம், மானாங்கோரை உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் புதுக்கோட்டை, மாத்தூரில் அப்துல் காதர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்,

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஜ்புர் தகர் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது,அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்படுவது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களது சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

மேலும் இது தொடர்பான விரிவான தகவல்கள் சோதனை நிறைவடைந்த பின்னர் என் ஐ ஏ அதிகாரிகள் தரப்பில் இருந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று அதிகாலை 5 மணி முதல் தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Chennai including 12 places NIA raids 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->