தமிழ் சினிமா ஒரு மாபெரும் சகாப்தத்தை இழந்துவிட்டது...! இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உருக்கமான இரங்கல்...! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் கிராமத்து வாழ்வியலை கவிதையாக்கி வெள்ளித்திரையில் நிலைநிறுத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு செய்தி திரைப்பட உலகையே சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள், கலைஞர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"தமிழ் திரைப்பட உலகின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவராக திகழ்ந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு செய்தி என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

கிராமத்து வாழ்க்கையின் இயல்பையும், மனித மனங்களின் ஆழமான உணர்வுகளையும், சமூகத்தின் நுணுக்கமான பரிமாணங்களையும் யதார்த்தத்துடன் திரையில் வடிவமைத்த அவரது படைப்புகள் காலத்தால் அழியாத கலைச் சின்னங்களாக நிலைத்து நிற்கின்றன.

தமிழ் திரைப்பட வரலாற்றில் தனித்துவமான பாதையை உருவாக்கிய அவர், தனது படைப்பாற்றலாலும் புதுமையான கதை சொல்லும் பாணியாலும் தலைமுறைகளை கவர்ந்த கலை மேதையாக போற்றப்படுவார்.அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா அமைதியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் மறைவையொட்டி நாடு முழுவதும் இருந்து இரங்கல் செய்திகள் குவிந்து வரும் நிலையில், அவரது படைப்புகளும் கலைப் பாரம்பரியமும் என்றும் தமிழ் மக்களின் நினைவில் நிலைத்திருக்கும் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil cinema lost great era Governor Rajendra Vishwanath Arlekar condoles director Bharathiraja demise


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->