'மாஸ்' அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஷாக்...! லாரன்ஸ் மாஸ்டரின் முக்கிய அறிவிப்பு ஒத்திவைப்பு...! புதிய தேதி எப்போது...? - Seithipunal
Seithipunal


திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் களமிறங்க உள்ளதாக கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வந்தன. இதனால் அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்தன.

இந்த சூழலில், “திருச்சி கிழக்கு தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன்” என்ற தகவல் பரவலாக பகிரப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து ஏராளமானோர் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விளக்கம் கேட்டு வருவதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

மேலும், தனது தற்போதைய திரைப்படப் பணிகள் நிறைவடைந்ததும், தாயாரின் ஆசீர்வாதத்துடன் தனது வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையக்கூடிய ஒரு தீர்மானத்தை ஜூன் 11-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அறிவிக்க உள்ளதாகவும் அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தமிழ் திரையுலகின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, தாம் அறிவிக்க இருந்த முக்கிய முடிவை ஒரு நாளுக்கு ஒத்திவைப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"ஜூன் 11-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு என் வாழ்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.ஆனால், பாரதிராஜா சார் அவர்களின் மறைவு செய்தி தமிழ் திரையுலகையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த இழப்பு, என் சொந்த குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த வேதனையைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.பாரதிராஜா சார் மீது நான் கொண்டுள்ள அளவற்ற மதிப்பும், தமிழ் சினிமாவுக்காக அவர் வழங்கிய மகத்தான கலைப் பங்களிப்பின் மீதான மரியாதையும் கருதி, நான் வெளியிட இருந்த அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன்.

எனவே, ஜூன் 11-ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அந்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.ராகவா லாரன்ஸின் இந்த முடிவு, பாரதிராஜாவுக்கு அவர் கொண்டிருந்த அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock fans waiting Mass update Lawrence Master important announcement postponed When new date


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->