பயிற்சி ஆட்டத்தில் மின்னல் வேக கோல்...! - உலகக் கோப்பைக்கு உலக நாடுகளுக்கு மெஸ்ஸி கொடுத்த மரண மாஸ் வார்னிங்...! - Seithipunal
Seithipunal


அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திரத் தலைவரும், உலக ரசிகர்களின் செல்ல நாயகனுமான லியோனல் மெஸ்ஸி, தசைப்பிடிப்பு பாதிப்பால் சில நாட்கள் ஓய்வில் இருந்த நிலையில், மீண்டும் களமிறங்கி தனது முத்திரையை பதித்துள்ளார்.கடந்த மே 24-ஆம் தேதி நடைபெற்ற பிலடெல்பியா யூனியன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இடது தொடையின் பின்புற தசையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மெஸ்ஸி போட்டிகளில் இருந்து விலகியிருந்தார்.

இதனால் அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் மத்தியில் கவலை நிலவியது.இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கான முன்னேற்பாடாக நடைபெற்ற ஐஸ்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 16 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மெஸ்ஸி மீண்டும் களமிறங்கினார்.

அவரது வருகை ரசிகர்களிடையே பேரார்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.போட்டியின் இரண்டாவது பாதியில் கியுலியானோ சிமியோனுக்குப் பதிலாக மாற்று வீரராக களம் கண்ட மெஸ்ஸி, தனது அனுபவத்தாலும் திறமையாலும் ஆட்டத்தின் போக்கை மேலும் விறுவிறுப்பாக்கினார்.

ஆட்டத்தின் 72-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை துல்லியமாக கோலாக மாற்றிய அவர், தேசிய அணிக்காக தனது கோல் எண்ணிக்கையை 117 ஆக உயர்த்தினார்.மெஸ்ஸியின் கோலுடன் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று ஆதிக்கத்தை நிரூபித்தது.

இந்த கோலின் மூலம், ‘லா அல்பிசெலெஸ்டே’ என அழைக்கப்படும் அர்ஜென்டினா தேசிய அணியின் வரலாற்றில் அதிக வயதில் கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் மெஸ்ஸி தன்வசப்படுத்தியுள்ளார்.

மெஸ்ஸியின் இந்த வெற்றிகரமான மீள்வரவு, உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக அர்ஜென்டினா அணிக்கு பெரும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.

இதையடுத்து, ஜூன் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி அல்ஜீரியாவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. அந்தப் போட்டியிலும் மெஸ்ஸியின் மாயாஜாலம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lightning fast goal training match Messi warning the world World Cup


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->