என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை., ஆனால்., திமுக கவுன்சிலர் மகன் எழுதிய மரண கடிதம்!
Tambaram DMK member Son Suicide case
செங்கல்பட்டு : திமுக கவுன்சிலர் மகன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மடிப்பாக்கம் அடுத்த கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் பிரேமலதா. தாம்பரம் மாநகராட்சியில் 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான இவரின் மகன் கோபிநாத் (வயது28), நேற்று இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார் உறவினர்கள், அவரே மீட்டு குரோம்பேடடை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கோபிநாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது, தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கோபிநாத் தனது அறையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தில், "என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை" என்று கோபிநாத் தெரிவித்திருந்தார்.
சம்பவம் குறித்து அந்த பகுதி வாசிகள் தெரிவிக்கையில், கவுன்சிலர் மகன் கோபிநாத்திற்கு திருமணம் செய்ய அவரின் பெற்றோர் ஏற்பாடு செய்து வந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் கோபிநாத்தின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tambaram DMK member Son Suicide case