#BREAKING | தாம்பரம் ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி பலி! செல்போன் பேசியது காரணமா?!
Tambaram College Girl Nikitha death in rail accident
சென்னை, தாம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவி கேரளாவை சேர்ந்தவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் பெயர் நிகிதா என்பதும், பிஎஸ்சி சைக்காலஜி படித்து வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவி செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயிலில் அடிப்பட்டு தூக்கி வீசப்பட்டதாகவும், பலத்தகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஒரு அண்மை செய்தி :
திருப்பத்தூர் : வாணியம்பாடி அருகே கார் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியாகிய சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார், சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் ரபீக் (வயது 13), சூர்யா (வயது 11), விஜய் (வயது 13) ஆகியோர் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
English Summary
Tambaram College Girl Nikitha death in rail accident