உனக்கு ஒரேயொரு சாய்ஸ்.. அதை பண்ணு.. விட்டுடுறேன்.. எஸ்.வி. சேகரை வச்சி செய்யும் காவல்துறை.!!
SV Sekar Police concluded to bail with condition
பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த எஸ்.வி சேகர், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக யூ டியூப் வீடியோவில் இந்திய தேசிய கொடியை அவமதிப்பு செய்து பேசியிருந்தார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பிற்கு வித்திட்டது.
இதனையடுத்து, சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இது குறித்து புகாரும் அளிக்கப்பட்டது. இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், சட்ட ஆலோசனைக்கு பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், எஸ்.வி சேகரை காவல் துறையினர் கைது செய்ய தயாரான நிலையில், கைது நடவடிக்கை உறுதியான பின்னர் எஸ்.வி சேகர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.
இது குறித்த மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தால் கைது செய்யப்பட மாட்டார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் மன்னிப்பு தொடர்பான மனு தாக்கல் செய்ய எஸ்.வி சேகருக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், காவல்துறை சார்பாகவும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை கைது செய்ய மாட்டோம் என வாய்மொழி உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
SV Sekar Police concluded to bail with condition