230 முறை சூரிய உதயத்தை பார்த்த சுபான்ஷு சுக்லா..ஆக்சியம் தகவல்!
Subhashu Shukla who has seen the sunrise 230 times Axiom information
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் 14 நாட்களில் 230 முறை சூரிய உதயத்தை பார்த்துள்ளார் என அமெரிக்க நிறுவனம் ஆக்சியம் அறிவித்துள்ளது.
ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஆக்சியம் நிறுவனங்கள் இணைந்து கடந்த ஜூன் 25-ந்தேதி நான்கு விண்வெளி வீரர்களை டிராகன் விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பின. ஜூன் 26 மாலை, இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது.
14 நாள் பயணத்திற்குள், சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் 60-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு திரும்புவர்.மேலும் அவர்கள் விண்வெளியில் இருந்தபடி, புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்தனர்; அதுமட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்ந்த தொடர்பில் இருந்தனர்.
அவர்கள் இதுவரை சுமார் 96.5 லட்சம் கி.மீ பயணம் செய்துள்ளதாக ஆக்சியம் தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின்போது சுபான்ஷு சுக்லா 230 முறை சூரிய உதயத்தை கண்டுகொண்டதாகவும் அமெரிக்க நிறுவனம் ஆக்சியம் அறிவித்துள்ளது.
மேலும் நாசா வெளியிட்ட தகவலின்படி, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள் ஜூலை 14-ம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சாதனை இந்திய விண்வெளித் துறைக்கே உலகளாவிய அறிவியல் சமூகத்திற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
English Summary
Subhashu Shukla who has seen the sunrise 230 times Axiom information