விண்வெளி நிலையத்திலிருந்து இன்று பூமிக்கு புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா!
Subanshu Sukla is departing from the space station to Earth today
இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 பயணத்தின் ஒருபகுதியான மூன்று சக விண்வெளி வீரர்களுடன், இன்று (ஜூலை 15, திங்கட்கிழமை) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு புறப்படுகிறார்.
14 நாட்கள் பணியாற்றிய அவர்கள், இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு டிராகன் கிரேஸ் விண்கலத்தில் புறப்பட்டு, சுமார் 22 மணி நேர பயணத்திற்குப் பிறகு, நாளை (செவ்வாய்) மாலை 3 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் தரையிறங்க உள்ளனர்.
இந்த குழுவில் 🇮🇳 சுபான்ஷு சுக்லா – இந்திய விமானப்படை, விண்வெளி ஆய்வாளர்,🇺🇸 பெக்கி விட்சன் – முன்னாள் நாசா விண்வெளி வீரர்,🇵🇱 ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி – போலந்து,🇭🇺 திபோர் கபு – ஹங்கேரி
விண்வெளியில் தங்கிய கடைசி நாட்களில் அவர்கள் அனுபவித்த சிறப்பான தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
மேலும் பெக்கி விட்சன் தனது X (முன்னைய Twitter) பதிவில்,“எங்கள் கடைசி நாட்களை நீரேற்றம் செய்யப்பட்ட இறால் உணவுகள், கேரட் அல்வா, மாம்பழ ஜூஸுடன் சிறப்பாக அனுபவித்தோம்,”என பதிவிட்டு, சுபான்ஷு சுக்லா இந்தியாவிலிருந்து கொண்டு வந்த உணவுகள் அனைவருக்கும் மிகவும் பிடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.அவர், சக விண்வெளி வீரர்களுடன் இரவு உணவை பகிரும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இதேபோல விண்வெளி வீரர் ஜானி கிம், தனது பதிவில்,“இந்த பணியில் எனக்கு மறக்க முடியாத மாலை – புதிய நண்பர்களுடன் ஒரு உணவைப் பகிர்ந்த தருணம்”என உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.
ஆக்ஸியம்-4 பயணத்தின் கீழ் இந்த குழுவினர், நிலவுக்கே நிலைநாட்டவுள்ள ஆர்டெமிஸ் திட்டங்களுக்கான முன்பயிற்சி மற்றும் நவீன தொழில்நுட்ப பரிசோதனைகள் உள்ளிட்ட முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Subanshu Sukla is departing from the space station to Earth today