குடிநீரில் நெளிந்தது புழுக்கள்! மாணவிகள் செய்த சம்பவத்தால் ஆசிரியர்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்ததால் அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் பள்ளியில் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் தண்ணீரில் குழுக்கள் இருந்தது குறித்து புகார் அளித்தால் மதிப்பெண்ணை குறைத்து விடுவோம் என மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் இன்று பள்ளியின் வாயிலின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் பள்ளியில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students protest for worm in the drinking tank in Salem


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->