தாலுகா அலுவலகங்களில் அடிப்படை வசதி இல்லாமல் மாணவர்கள் அவதி..அதிமுக உரிமை மீட்பு குழு புகார்! - Seithipunal
Seithipunal


தாலுகா அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சான்றிதழ்கள் பெற வருவதால்,அடிப்படை வசதிகள் மற்றும் சான்றிதழ் விநியோகம் என்று அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், புதுவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :தற்போது பொதுத் தேர்வுகள் முடிந்து மாணவர்கள் உயர் கல்விக்காகவும், வேலைவாய்ப்பு தேடலுக்காகவும் தாலுகா அலுவலகங்களை பெருமளவில் நாடுகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சான்றிதழ்கள் பெற வருவதால், தாலுகா அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் நெருக்கடியானதாக இருக்கிறது.

போதுமான இட வசதி,இருக்கை வசதி, குடிநீர், மின் விசிறிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, கோடை வெப்பத்தில் நீண்ட வரிசைகளில் நின்று சான்றிதழ்கள் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை எதிர்நோக்கியே மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை அவர்களின் பள்ளிகளிலேயே வழங்கும் திட்டம் குறித்து அதிமுக உரிமை மீட்பு குழுவின் தொடர் கோரிக்கை நேற்று முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். ஆனால், இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

எனவே, கீழ்க்காணும் கோரிக்கைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து, அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்:அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் குடிநீர்,மின் விசிறிகள் மற்றும் இட வசதி மற்றும் இருக்கைகள்,உடனடியாக ஏற்படுத்துதல்.

கோடைகால சூழ்நிலையை பொருத்து, பொதுமக்கள் நிழலில் நின்று சேவை பெறும் வகையில் பசுமை பந்தல்களை அமைத்தல்.பொதுப்பணித்துறையின் குடிநீர் பிரிவின் மூலம் தாலுகா அலுவலகங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யுதல்.பள்ளிகளிலேயே சான்றிதழ்கள் வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்துதல்.

இவை அனைத்தும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு கையாள வேண்டிய அவசர தேவைகளாக உள்ளன. எனவே, மாவட்ட ஆட்சியராக தாங்கள் உடனடி நடவடிக்கைகள் எடுத்து, பொதுமக்களுக்கு சீரான சேவையை உறுதி செய்ய வேண்டுகிறோம்.எங்களின் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை குறித்து ஆட்சியர் அவர்கள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Students are suffering without basic facilities in taluk offices AIADMKs rights recovery committee complaints


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->