நீச்சல் பழகிய போது நடந்த விபரீதம்.. தண்ணீரில் மூழ்கி மாணவர் பலி..! - Seithipunal
Seithipunal


நீச்சல் பழகிய போது நீரில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கமால்சாகிப் தெருவை முசாகலிம் (20). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் அங்குள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அவரது  நண்பரகள் கூச்சலிட்டனர். அக்கம்பக்கதினர் வந்து காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் அவர் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student drowns and dies


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal