மரணப் போராட்டம்...! திருவண்ணாமலையில் ஆழமான கிணற்றில் விழுந்து...! - இரவு முழுவதும் உயிருக்கு போராடிய தொழிலாளி அதிரடி மீட்பு...!
struggle death Falling deep well Tiruvannamalai worker who fought his life all night rescued by rescue team
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தொழிலாளி ஒருவர் தவறி ஆழமான விவசாய கிணற்றில் விழுந்து, இரவு முழுவதும் உயிர் பிழைப்புக்காக போராடிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அவரை உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (35), கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், புனித கிரிவலத்தில் ஈடுபடவும் சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.நேற்று முன்தினம் மாலை இனாம்காரியந்தல்-கோடிகுப்பம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததுடன், நீச்சல் தெரியாத காரணத்தால் அருண்குமார் தண்ணீரில் தத்தளித்துள்ளார். அப்போது கிணற்றுக்குள் இருந்த மோட்டாரின் பிளாஸ்டிக் குழாயை பிடித்துக்கொண்டு உயிர் தப்பிக்க போராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த பகுதி மக்கள் நடமாட்டம் குறைந்த இடமாக இருந்ததால், அவர் எழுப்பிய உதவிக்குரல் யாருடைய காதுகளுக்கும் எட்டவில்லை.
இதனால் முழு இரவும் கிணற்றுக்குள் நின்றபடியே உயிர் பிழைக்க கடும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை கிணற்றின் உரிமையாளரின் மகன் மோட்டாரை இயக்குவதற்காக அங்கு சென்றபோது, கிணற்றுக்குள் இருந்து உதவிக்குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் கிணற்றுக்குள் பார்த்தபோது அருண்குமார் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு உடனடியாக திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேர மீட்பு நடவடிக்கைக்கு பிறகு கிணற்றுக்குள் இறங்கி அருண்குமாரை பாதுகாப்பாக மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நாள் முழுவதும் ஆழமான கிணற்றுக்குள் உயிர் தப்பிக்க போராடிய இந்த சம்பவம் திருவண்ணாமலை முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
struggle death Falling deep well Tiruvannamalai worker who fought his life all night rescued by rescue team