கரூரில் நேற்று த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தில் பேசி முடித்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பெரும் துயர சம்பவம் நடந்தது. இந்தக் கூட்டம் கலைந்து செல்லும் தருணத்தில் ஏற்பட்ட நெரிசலில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து விழுந்தனர். அவர்களை உடனடியாக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அந்த விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.மேலும், மருத்துவமனைகளில் பலர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு தமிழகமெங்கும் சோகத்தை பரப்பியது. இந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நள்ளிரவே கரூருக்கு புறப்பட்டு, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
கரூர் மாவட்டம் முழுவதும் இன்று துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.இந்நிலையில், உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் பெயர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதில் சிறு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என பலரும் அடங்குவர்.
சந்திரா(வயது 40) க/பெ.செல்வராஜ், ஏமூர், புதூர், கரூர்.
குருவிஷ்னு(வயது 2) த/பெ.விமல், வடிவேல் நகர், வேலுச்சாமி புரம், கரூர்.
ரமேஷ்(வயது 32) த/பெ.பெருமாள், கோடங்கிபட்டி, கரூர்.
சனுஜ்(வயது 13) த/பெ.ரகு காந்திகிராமம், தாந்தோனி கிராமம், கரூர்.
கிருத்திக்யாதவ்(வயது 7) த/பெ.சரவணன், கருப்பாயி கோவில் தெரு, 5 ரோடு, கரூர்.
ஆனந்த்(வயது 26) த/பெ.முருகன், அரூர் மெயின் ரோடு, சுக்காம்பட்டி, சேலம்.
சங்கர் கனேஷ்(வயது 45) த/பெ.பால்ராஜ், வடக்கு தாளிபட்டி, குஜிலியம்பாறை வட்டம், திண்டுக்கல்.
விஜயராணி(வயது 42) க/பெ.சக்திவேல், தாழைப்பட்டி, பிச்சம்பட்டி, கரூர்.
கோகுலபிரியா(வயது 28) க/பெ.ஜெயபிரகாஷ், செம்மாண்டபாளையம், வெள்ளகோவில், காங்கேயம் வட்டம், திருப்பூர்.
பாத்திமாபானு(வயது 29) க/பெ.பிரபாகரன், கொள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல்.
கிஷோர்(வயது 17) த/பெ.கனேஷ், வடக்கு காந்திகிராமம், அன்பு நகர், கரூர்.
ஜெயா(வயது 55) க/பெ.சுப்பிரமணி, ரெட்டிகடை தெரு, வெங்கமேடு, கரூர்.
அருக்காணி(வயது 60), ஏமூர் கிராமம், கரூர்.
ஜெயந்தி(வயது 43) க/பெ.சதீஷ்குமார், மாரியம்மன் கோவில் தெரு, வேலாயுதம்பாளையம், புகளூர்.
ஸ்ரீநாத்(வயது 16), மேட்டூர், சேலம்.
மோகன்(வயது 19), ஜம்பை பவானி, ஈரோடு.
பிரித்திக்(வயது 10), ஏமூர், கரூர்.
தாமரைக்கண்ணன்(வயது 25) த/பெ.முருகேசன், ஒத்தப்பட்டி காலனி, பாகநத்தம், கரூர்.
ஹேமலதா(வயது 8) க/பெ.ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர்.
சாய்லெட்சனா(வயது 8) த/பெ.ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர்.
சாய்ஜீவா(வயது 4) த/பெ.ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர்.
சுகன்யா(வயது 33) க/பெ.தேவேந்திரன், வடிவேல்நகர் காவலர் காலனி, கரூர்
ஆகாஷ்(வயது 23) த/பெ.மாணிக்கம், காமராஜ்புரம், கரூர்
தனுஷ்குமார்(வயது 24) த/பெ.இளங்கோவன், காந்திநகர், காந்திகிராமம், கரூர்
வடிவழகன் (எ)வடிவேல்(வயது 54) த/பெ.முத்துசாமி 61, மேங்காட்டுதெரு, பசுபதிபாளையம், கரூர்.
ரேவதி(வயது 52) க/பெ.முருகேசன், கொடுமுடி வட்டம், ஈரோடு.
ரவிகிருஷ்ணன்(வயது 32) த/பெ.மருதாசலம், பாரதியார் தெரு, எல்.என்.எஸ் கிராமம், கரூர்.
பிரியதர்ஷ்ணி(வயது 35) க/பெ.சக்திவேல், ஏமூர் கிராமம், கரூர்.
தரணிகா(வயது 14) த/பெ.சக்திவேல், ஏமூர் கிராமம், கரூர்.
பழனியம்மாள்(வயது 11) த/பெ.பெருமாள், கே.எ.நகர், 2 வது தெரு 37/2டி, கோதூர் ரோடு, வேலுச்சாமிபுரம், கரூர்.
கோகிலா(வயது 14) த/பெ.பெருமாள், கே.எ.நகர், 2 வது தெரு 37/2டி, கோதூர் ரோடு, வேலுச்சாமிபுரம், கரூர்.
மகேஷ்வரி (வயது 45) க/பெ.சக்திவேல், 9E லெட்சுமிநகர் அரசுகாலனி, அருகம்பாளையம், மண்மங்கலம்.
அஜிதா(வயது 21) த/பெ.மணி (எ) புகழேந்தி, தொக்குப்பட்டி, புதூர், அரவக்குறிச்சி, கரூர்
மாலதி(வயது 36) க/பெ.கிருஷ்ணமூர்த்தி 86/5, பாரதியார் நகர், ராயனூர் வடக்கு, கரூர்.
சுமதி(வயது 50) க/பெ.மணி (எ) சுப்பிரமணி, 80 அடி ரோடு, 24, ரெத்தினம்சாலை, கரூர்.
மணிகண்டன்(வயது 33) த/பெ.பாலாஜி, தீர்த்தம்பாளையம், தாராபுரம் மெயின் ரோடு, வெள்ளக்கோயில் காங்கேயம் வட்டம், திருப்பூர்.
சதீஷ்குமார்(வயது 34) த/பெ.துரைசாமி, ஆவுடையார்பாளயம், காந்திநகர், கொடுமுடி, ஈரோடு