'தவறு திருத்திக்கோ... தப்பு வருந்திக்கோ...!' -கரூர் விபத்து குறித்து சத்யராஜின் எச்சரிக்கைச் சொற்கள்
Correct mistake Repent Sathyarajs warning words regarding Karur accident
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டம் பெரும் துயரமாக மாறியது.அந்த கூட்ட நெரிசலில் சிக்கி, 8 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.இந்த துயரத்துக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் இரங்கலை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறு, நடிகர் சத்யராஜ் கூட ஒரு வீடியோ வெளியிட்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். அந்த வீடியோவில் அவர்குறிப்பிட்டதாவது,"“கரூரில் உயிரிழந்த குடும்பங்களுக்குப் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தவறு என்பது தெரியாமச் செய்வது… தப்பு என்பது தெரிஞ்சும் செய்வது.
தவறு செய்தவன் திருந்திப் பார்க்கணும்… தப்பு செய்தவன் வருந்தியே ஆகணும்.
சிந்திச்சுப் பார்த்து செய்கையை மாத்திக்கோ.
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ… இல்லனா அது பெரிய துயரமா மாறிடும்.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா… அது திரும்ப வராத மாதிரி பாத்துக்கோ…” என்று உணர்ச்சியோடு தெரிவித்திருந்தார்.இதில் குறிப்பிடும் விதமாக வீடியோவின் முடிவில் சத்யராஜ் 'ச்ச' என்று சொன்னது அவரின் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறது.
English Summary
Correct mistake Repent Sathyarajs warning words regarding Karur accident