பசும்பொன் பயணத்தை ரத்து செய்த ஸ்டாலின்! வீட்டில் இருந்தபடியே அரசு பணிகளையும் மேற்கொள்ள திட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல் நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வந்ததாக தெரிய வந்தது. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்ந்து பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.

இந்த நிலையில் மருத்துவமனை சார்பாக நேற்று இரவு அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதுகு வலி தொடர்பான வழக்கமான பரிசோதனைக்கு ஸ்டாலின் வந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாளை முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் செல்ல திட்டமிட்டு இருந்த ஸ்டாலினின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் நேற்று சிகிச்சையின் பொழுது நீண்ட தூர பயணம் தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அரசு பணிகளையும் வீட்டில் இருந்தபடியே மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin canceled the Pasumpon trip


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->