நடுரோட்டில் கத்திக்குத்து...! - பெரம்பூரில் கார் டிரைவரை கொடூரமாக வெட்டிய 4 பேர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


சென்னையில் பழைய பகை காரணமாக கார் ஓட்டுநரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் 4 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை ஏழுகிணறு தையப்பன் தெருவைச் சேர்ந்த முகம்மது செரிப் (47), கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், மண்ணடி இப்ராகிம் தெருவைச் சேர்ந்த சாதிக் அலி (45) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், சம்பவத்தன்று காலை முகம்மது செரிப் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் அவரை வழிமறித்துள்ளனர்.

பின்னர், சாதிக் அலியின் குடும்பத்தினருடன் ஏன் பிரச்சினை செய்கிறாய் எனக் கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கையில் வைத்திருந்த கத்தியால் முகம்மது செரிப்பை சரமாரியாக வெட்டிய அந்த கும்பல், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.

திடீர் தாக்குதலில் பலத்த காயமடைந்த முகம்மது செரிப்பை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முத்தியால்பேட்டை காவலர்கள் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.விசாரணையின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சாதிக் அலி, பைசல் ரகுமான் (32), மைதீன் (37), அப்துல் காசிம் (35) ஆகிய 4 பேரை காவலர்கள் கைது செய்தனர்.

மேலும், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மற்றொரு நபரை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையிலும் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stabbing middle road 4 people arrested for brutally stabbing car driver Perambur


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->