நீண்ட தூர பயணிகளுக்கு குட் நியூஸ்...! அரசு பேருந்துகளில் ரூ.10-க்கு 'பயணி' வாட்டர் பாட்டில் அறிமுகம்...! - Seithipunal
Seithipunal


நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்யும் வகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலை குறைந்த விலையில் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ‘பயணி’ என்ற பெயரில் ஒரு குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யும் திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.

சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,080-க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பேருந்துகளில் தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நேரப் பயணத்தின் போது பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ‘பயணி’ குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ‘அம்மா குடிநீர்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டம், கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வந்த அரசு குடிநீர் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2021-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் திட்டம் தற்போது புதிய வடிவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முதற்கட்டமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பேருந்துகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பயணத்தின் போது குடிநீருக்காக அதிக தொகை செலவிட வேண்டிய நிலையை தவிர்த்து, பாதுகாப்பான குடிநீரை குறைந்த விலையில் பயணிகள் பெற்றுக்கொள்ள இந்தத் திட்டம் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news long distance travelers Passenger water bottles introduced rupees 10 government buses


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->