திருவண்ணாமலைக்கு இன்று வருகிறார் அமித்ஷா! முழு பயணத் திட்டம் இதோ! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திருவண்ணாமலைக்கு வருவதையொட்டி, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனது பயணத்தின்போது ரமண மகரிஷி ஆசிரமத்திற்குச் செல்லும் அமித்ஷா, அங்கு நடைபெறும் சிறப்பு பூஜையிலும் கலந்து கொள்கிறார்.

அமித்ஷா இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு புறப்படுகிறார்.

திருவண்ணாமலை–செங்கம் சாலையில் உள்ள கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது. அங்கிருந்து கார் மூலம் ரமண மகரிஷி ஆசிரமத்திற்குச் செல்லும் அமித்ஷா, அங்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார்.

இதனைத் தொடர்ந்து ரமண மகரிஷி ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டு புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு சுவாமி தரிசனம் செய்த பின்னர், திருவண்ணாமலையில் இருந்து சாலை மார்க்கமாக புதுச்சேரிக்குப் புறப்படுகிறார்.

புதுச்சேரி சென்றடையும் அமித்ஷா, அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்பட உள்ள விருதுகளை வழங்கி உரையாற்றுகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அவரது பயணப் பாதையிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah visits Tiruvannamalai today Here is the full itinerary


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->