ஸ்ரீவில்லிபுத்தூர் | விஷ வந்து கடித்து விஏஓ பலியான அதிர்ச்சி சம்பவம்! போலீஸ் விசாரணை! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷ வண்டு கடித்ததில் கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த முல்லை நகர் புது தெருவை சேர்ந்தவர் இந்திரா காந்தி. இவரின் கணவர் தங்கராஜ் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றியவர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் உயிரிழந்த நிலையில், மகள் முத்துமீனா, மகன் அரவிந்து உடன் இந்திரா காந்தி வசித்து வருகிறார்.

மேலும் இந்திரா காந்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மல்லி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடந்த இன்று முல்லை நகரில் உள்ள தனது வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார்.

அப்போது எங்கிருந்தோ வந்த விஷ வண்டு ஒன்று இந்திரா காந்தியை கடித்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இந்திரா காந்தி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SriValliputtur Malli VAO Death


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->