ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு!
Srirangam Ranganathar Temple Chithirai Car Race Thousands of devotees offer prayers with great devotion
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா'ரங்கா... ரங்கா... என்ற முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனை தொடர்ந்து விழாவின் 7-ம் நாளான வியாழக்கிழமை, மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு வந்து நெல்லளவு கண்டருளினார்.இதையடுத்து 8-ம் நாளான நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்த தேரோட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'கோவிந்தா'ரங்கா... ரங்கா... என்ற முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Srirangam Ranganathar Temple Chithirai Car Race Thousands of devotees offer prayers with great devotion