சி.இ.ஓ பதவியிலிருந்து ஸ்ரீதர் வேம்பு திடீர் விலகல்.. காரணம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார்.

கார்ப்ரேஷன் உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது ஜோஹோ நிறுவனம் .சென்னையை தலைமையிடமாகக் கொண்ட  ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியுள்ள ஸ்ரீதர் வேம்பு, Chief Scientist என்ற புதிய பொறுப்பை ஏற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஸ்ரீதர் வேம்பு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் மென்பொருள் தொழில் செயற்கை நுண்ணறிவுஉள்ளிட்டவற்றின் வருகையால் மாற்றம் கண்டுவரும் நிலையில் ஜோஹோ நிறுவனத்திலும் இந்த மாற்றம் நிகழ்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

 மேலும் தொடர்ந்து ஜோஹோ இணை நிறுவனரான ஷைலேஷ் குமார் புதிய சிஇஓ ஆக நியமிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.அதனை தொடர்ந்து மற்றொரு இணை நிறுவனரான டோனி தாமஸ், ஜோஹோ US பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும்  ராஜேஷ் கணேசன் ManageEngine பிரிவையும், மணி வேம்பு Zoho.com பிரிவையும் தொடர்ந்து வழிநடத்துவார்கள் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sridhar Vembu resigns as CEO Do you know the reason?


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->