இலங்கை கடற்படையின் தாக்குதலால் மாயமான தமிழக மீனவர் உடல் மீட்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் படகுகளின்  மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதால் மாயமான மீனவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 180 மேற்பட்டவர்கள் விசைபடகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.

கரையில் இருந்து 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீனவர்களின் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான விசைபடகின் மீது மோதியது.

இந்த தாக்குதலால் அந்த படகு சேதமடைந்தது அதிலிருந்த மீனவர்கள் கடலில் வீழ்ந்து தத்தளித்தனர்.  இலங்கை கடற்படையினர் நீரில் தத்தளித்த மீனவர்கள் இருவரை காப்பாற்றினர். மேலும் அந்த படகில் இருந்த ராஜ்கிரண் என்ற மீனவர் மாயமானார்.

இதனை அடுத்து மாயமான மீனவர் ராஜ்கிரணின் உடல் தற்போது மீட்கப்படுள்ளது. கைது செய்த மீனவர்களை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan Navy rescue Tamilnadu fisherman's body


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal