தேர்தல் பற்றிய சிறப்பு பயிற்சி..டெல்லி செல்லும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்!  - Seithipunal
Seithipunal


22 மற்றும் 23 ஆம் தேதியன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள தேர்தல் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வது குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி புதுச்சேரி  மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில்வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் - 1-க்கான நியமனம் மற்றும் அவ்வாறு நியமிகபட்டவர்களுக்கு இம்மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதியன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள தேர்தல் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வது குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில்  புதுச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியமான  குலோத்துங்கன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் புதுவையில் உள்ள தொகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குச் சாவடி நிலைய முகவர் - 1 க்கான முகவர்களை இம்மாதம் 12 ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்பதால் இன்று (அல்லது) நாளையோ தங்கள் முகவர்களின் பெயர்களை குறிப்பிடும்படி ஆட்சியர் அவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special training on electionsRepresentatives of political parties going to Delhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->